ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக செய்தித்தாளான ‘ஆப்பிள் டெய்லி’ நேற்றுடன் மூடப்பட்டது. அந்த பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர், நிர்வாகிகள் என பெரும்பாலானோரை சீனா கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அப்பத்திரிகையின் சொத்துக்களை முடக்கிவிட்டது. இதனால் வேறு வழியின்றி பத்திரிகை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.