திருநாவுக்கரசர் புது விளக்கம்

திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றால் அங்கு மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு உடனே சென்று விடுவார்கள், கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இதனால் கூட்டம் கூட வாய்ப்பிருக்கின்றது என்பதால்தான் திறக்கப்படவில்லை. அதுவும் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டும்தான்” என புதிதாக விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். மது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும், அதனால் கொரோனா தொற்று மேலும் பரவும். டாஸ்மாக்கில் சமூக இடைவெளி தொடர்ந்து முறையாக பின்பற்றப்படுவது சந்தேகமே. மதுவால் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும் என்பது அவருக்குத் தெரியாதா அல்லது தி.மு.க தலைவர்களான ஸ்டாலினும், கனிமொழியும், காங்கிரஸ் தலைவர்களும்கூட கடந்த கொரோனா முதல் அலையின்போது, டாஸ்மாக்கை மூட சொல்லி, போராட்டங்கள் நடத்தியபோது, இந்த யோசனை அவருக்குத் தோன்றவில்லையா என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.