பா.ஜக.வைச் சேர்ந்த மூத்த தலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு வங்கத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்தது போல இதுவரை எந்த மாற்றமுமின்றி ஆளும் திருணமூல் கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்.எல்.ஏ.க்கள் எதிர் கட்சிகளுடன் தொடர்பில் உள்ளனர். அதில் 21 எம்எல்ஏ.க்கள் நேரடியாக பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளனர். சிறிது காலம் பொறுமையுடன் இருங்கள். அதன் பிறகு எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்” கூறினார். முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, “திருணமூல் காங்கிரஸ் கட்சி அதன் ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது. 2024ம் ஆண்டில் அந்த கட்சி ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படும்” என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.