பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி தன் அறிக்கையில், ‘முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து, பஞ்சமி நிலங்கள் மீட்பு, அதற்காக தனிக் கமிஷன் அமைத்தல் தொடர்பாக மனு அளித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். ஆனால், ஏற்கனவே மூன்று கமிஷங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் முடிவுகள் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தலித் மக்களை ஏமாற்ற திருமாவளவன் நாடகம் போடுகிறார். தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் அலுவலகம் இருக்கும் நிலமும் பஞ்சமி நிலம்தான். அதனை தலித்துகளுக்கு திருப்பி அளிக்க ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்துவாரா? ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, சிறுதாவூர் பங்களா உள்ள நிலம், பஞ்சமி நிலம் என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக் கமிஷனும் அதனை உறுதி செய்தது. அப்போது, அ.தி.மு.க கூட்டணியில் இருந்த திருமாவளவன், ‘அது பஞ்சமி நில வகையைச் சேர்ந்தது அல்ல’ என கூறினார். அரசியலுக்காக திருமாவளவன் கூசாமல் பொய் சொல்வார். திருமாவளவன், சிறுதாவூர் பங்களா மற்றும் முரசொலி அலுவலக இடத்தை மீட்டு மீண்டும் தலித்களுக்கே திருப்பி அளிக்க முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.