பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டி கொள்ளும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பட்டியலினத்தவர் உட்பட அனைவருக்கும் துரோகம் செய்து வருகிறார். தி.மு.க, கிறிஸ்தவ அமைப்புகள், முஸ்லிம்களிடம் இருந்து பணம் பெற்று சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், தேசத்திற்கு விரோதமாக செயல்படுவோருக்கு எதிராக எந்த கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் போராடாமல் ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார், பட்டியல் சமூக இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார் என ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.