ராஜஸ்தானில் மூன்றாவது அலையா?

கொரோனா தொற்றுடன் நமது நாடு போராடி வரும் வேலையில், ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நேரத்தில் பல குழந்தைகள் ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் துங்கர்பூரில் கொரோனா தொற்றுக்கு19 வயதிற்குட்பட்ட 325 பேரும் தவுசா மாவட்டத்தில் கிட்டதட்ட இதே அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா பரிசோதனையில்தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் இந்த இரு மாவட்டங்களிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), மூன்றாவது கொரோனா அலை நாட்டைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.