இவர்கள்தான் காங்கிரஸ் முதல்வர்கள்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கிற்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையேயான பனிப்போரை அடுத்து அமரிந்தர் சிங் அதிரடியாக பதவி விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2018ல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், அமைச்சர் சரண்ஜித் சிங் தனக்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பியதாக ‘மீடூ’ இயக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த ஆண்டு மே மாதம், அந்த பெண் அதிகாரியின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பஞ்சாப் மகளிர் ஆணையம் காங்கிரஸ் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மார்பிங் செய்த போலியான பாலியல் சிடியை வைத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிக்கிய பூபேஷ் பாகலை சத்தீஸ்கர் முதல்வராகவும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர் பாலியல் புகார் வழக்கில் சிக்கிய உம்மண்சாண்டியை கேரள முதல்வராகவும் அமரவைத்து அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி தற்போது அந்த வரிசையில் ‘மீடூ’ புகாரில் சிக்கிய சரண்ஜித் சிங் சன்னியையும் முதல்வராக ஆக்கி தன் கட்சியின் பழம்பெருமையை நிலைநாட்டியுள்ளது.