கட்சிகளை தண்டிக்க வழியில்லை

2014 பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.க நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறி, வழக்குப் பதிவு செய்யக் கோரிய குர்ஷிதுரேமான் எஸ் ரெஹ்மான் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ், ‘அரசியல் கட்சியினர் வெளியிடும் தேர்தல் அறிக்கையானது, தேர்தல் காலத்தில் அவர்களின் கொள்கை, பார்வை, வாக்குறுதிகள், உறுதிமொழிகள் ஆகியவற்றின் அறிக்கை. இதை அவர்களை செய்தாகவேண்டும் என கட்டுப்படுத்தாது. அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அரசியல் கட்சிகளை அமலாக்க அதிகாரிகளின் பிடியில் கொண்டு வருவதற்கோ, அவர்களை அதற்கு பொறுப்பேற்க வைக்கவோ எந்தச் சட்டத்திலும் இடமில்லை’ என கருத்துத் தெரிவித்தார்.