பேரறிவாளன் நிகழ்ச்சி இல்லை

டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில், ‘ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்’ கல்லுாரியில் ‘மறுக்கப்பட்ட நீதியும் முடிவுறாத தேடலும்’ என்ற தலைப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விரிவுரை ஆற்ற போகும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி தற்போதுகைவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரியின் தலைவர் சசிகுமார் கூறுகையில், “சென்னையில் உள்ள எங்கள் இதழியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கத்தை டெல்லி தேசிய சட்ட பல்கலைக் கழகம், தங்களுடைய நிகழ்ச்சிக்காக வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்பான துண்டு பிரசுரங்களில், டெல்லி சட்ட பல்கலைக் கழகமும் எங்கள் கல்லூரியும் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவது போல அச்சிடப்பட்டு இருந்தது.இது எதுவும் எங்களுக்கு தெரியாது.அந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.இருந்தபோதும் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டன.அரசியல் ரீதியிலும் எதிர்ப்புகள் வந்தன.இதனால் அதிர்ச்சி அடைந்தோம்.உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து அரங்கம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்.அதனால், வரும் 17ல் அந்த நிகழ்ச்சி எங்கள் கல்லூரி வளாகத்தில் நடக்காது” என்று தெரிவித்துள்ளார். ஆனால், பலத்த எதிர்ப்புக்களையும் மீறி, ஏற்கனவே அறிவித்தபடி அதே நாளில், அதே நேரத்தில் ஆன்லைன் வழியாக பயங்கரவாதி பேரறிவாளன் கலந்துகொள்ளும் அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதாக தேசிய சட்டப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.