எல்லை பிரச்சனையில் சமரசமில்லை

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதம் தனது ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது. சீனாவுடனான கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேச எல்லைப் பிரச்சனைகள் மற்றும் நேபாள எல்லை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சினைகள்  பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். பாரதத்தின் ஒற்றுமை அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் எதிரிகள் யாராக இருந்தாலும் பாரதம் அதற்காக தக்க பதிலடியை பலமடங்காக அளிக்கும். எங்களது அரசியல் எதிரிகள் உண்மைகளை முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் கேள்விகளை எழுப்புகிறார்கள். 1962 சீன இந்திய போரின்போது என்ன நடந்தது என நான் கூறவிரும்பவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பாரதத்தின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை ஒரு பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசத்தின் பெருமையிலும் நற்பெயரிலும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாது. முன்புபோல பாரதம் பலவீனமான நாடாக இல்லை. சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளதை உலகம் உற்று கவனித்து வருகிறது. நாம் உலகின் எந்த ஒரு நாட்டையும் தாக்கவில்லை. மற்றவர்களின் ஒரு அடி நிலத்தை கூட கைப்பற்றவில்லை. அனால், நமது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனில் எந்த நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது” என தெரிவித்துள்ளார்.