நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘பாஸ்ட் டேக்’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் இம்முறைக்கு மாறிவிட்டன.இதனால் சுங்கச்சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.தற்போது, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு வரையப்படும்.இக்கோட்டினை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தால் அந்த குறிப்பிட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம். சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 வினாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக்கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.