பிரதமர் நரேந்திர மோடி சமூக டுவிட்டரில் அதிகமான நபர்களால் பின்தொடரப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராகவும் பாரத அளவில் முதலாவதாகவும் உள்ளார். அவரை 70 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது பின்தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு டுவிட்டரில் 30.9 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு 7.1 மில்லியன், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 130 மில்லியன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 26.3 மில்லியன், ராகுல் காந்திக்கு 19.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். என்றும் நவீன தொழில்நுட்ப ஆர்வலரான மோடி, நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க சமூக வலைத்தள தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறார். முன்னதாக, குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அரசியல் பிரச்சாரத்தில் 3 டி ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்டி இதில் முன்னோடியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.