உலகமே விரும்பும் கோ-வின் செயலி

சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த, பொது சுகாதாரத்திற்கான இரண்டாவது மாநாட்டில் பேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா, ‘கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு பயன்படுத்தப்படும், ‘கோ – வின்’ செயலியை போன்ற தொழில்நுட்பத்தை, தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த ஐக்கிய அரபு அமீரகம், கனடா, மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. அவர்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாக அளித்திட, மத்திய அரசு தயாராக உள்ளது. ‘கோ – வின்’ செயலி உருவாக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே, 30 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசிக்காக அதில் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர். இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு, தேதியில் மாற்றம் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் நடைமுறையை மிக எளிதாக மேற்கொள்ளலாம். குடிமக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, மாவட்ட அளவில் துல்லியமான, உண்மையான தகவல்களை பெற முடியும்’ என தெரிவித்தார்.