உலகின் முதல் மிகச் சிறிய சிப்

தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய நிறுவனமான, ஐ.பி.எம்., புதிதாக, ‘இரண்டு நானோமீட்டர் சிப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் உலகின் முதல், இரண்டு நானோமீட்டர் சிப். இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக, 5 ஆயிரம் கோடி டிரான்சிஸ்டர்களை, ஒரு விரல் நகத்தில் அடக்கிவிட முடியும். இதனால், இணையத்தை அணுகுவது வேகமாகும், கணினி வேகம் அதிகரிக்கும், அலைபேசியின் பேட்டரி நீண்ட நாட்கள் வரும், மொபைல் அப்ளிகேஷன் பயன்பாடுகளிலும் வேகம் அதிகரிக்கும் என்கிறது ஐ.பி.எம்.நிறுவனம். இந்த சிப்பின் வரவு, செமிகண்டக்டர் துறையில் கண்டிப்பாக பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இப்போது இருக்கும் 7 நானோமீட்டர் நோட் சிப்புகளை விட 45 சதவீதம் அதிக செயல்திறன், 75 சதவீதம் குறைவான பேட்டரி ஆற்றல் பயன்பாட்டைக் கொண்டதாக இந்த சிப் இருக்கும் என கூறப்படுகிறது.