மலையாள மனோரமா நிறுவனத்தின் வெளியீடான தி வீக் வார இதழ், கடந்த 2016ல், வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரை குறித்து இழிவுபடுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வீர சாவர்க்கரின் வாழ்க்கையைப் குறித்த விரிவான உண்மைகளை புறக்கணித்து ஒரு சார்பாக அவதூறு பரப்பும் விதத்தில் நிரஞ்சன் தாக்லே என்பவரால் இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து, வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் தி வீக் பத்திரிகைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து, பத்திரிகையின் தற்போதைய ஆசிரியரான வி.எஸ்.ஜெயசந்திரன், ரஞ்சித் சாவர்க்கருடன் பேசி நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சுமூக தீர்வை எட்டினார், அதன்படி, அவர் கட்டுரையை வெளியிட்டதற்காக அவர் பகிரங்க மன்னிப்பை கேட்டுள்ளார். அதன்படி, ‘நாங்கள் வீர சாவர்க்கரை மிகவும் மதிக்கிறோம். அவரை உயர்வான இடத்தில் வைத்துள்ளோம். இந்த கட்டுரை எந்தவொரு தனிநபருக்கும் தனிப்பட்ட காயத்தை ஏற்படுத்தியிருந்தால், பத்திரிகை நிர்வாகம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.’ என்ற செய்தியை பத்திரிகை வெளியிட்டுள்ளது.