மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதை ஒப்பிடுகையில் பாரதத்தில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பாரதம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுயசார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதில் பாரதம் தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுயசார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ‘இந்தியா எரிசக்தி வாரம் 2023’ என்ற நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. பிராந்திய மற்றும் உலக அளவில் உள்ள முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து எரிசக்தித் துறையில் வளர்ச்சி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்” என்று கூறினார். இந்நிகழ்வில்‘இந்தியா எரிசக்தி வாரம் 2023’ நிகழ்ச்சி தொடர்பாக ஒரு லோகோவையும் மத்திய அமைச்சர் வெளியிட்டார்.