மனத்தின் குரல்

நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக நீங்கள் எழுதியிருக்கும் ஏராளமான கடிதங்கள்வந்திருக்கின்றன. இவை அனைத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த, 24, 25 வயதுடைய இளைஞர்களிடத்திலே ஒரு வினாவை எழுப்ப விரும்புகிறேன்.இந்த வினா மிக ஆழங்காற்பட்டது, இது குறித்து நீங்கள் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும்.உங்களுடைய பெற்றோர் உங்கள் வயதில் இருந்த போது, அவர்கள் வாழ்க்கையில் வாழும் உரிமை ஒருமுறை பறிக்கப்பட்டது பற்றித் தெரியுமா?இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம்.ஆனால் இது சாத்தியமானது. 1975ல். இதே ஜூன் மாதத்தில் தான் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.தேசத்தின் குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.அப்படிப் பறிக்கப்பட்ட ஒரு உரிமை தான் அனைத்து பாரதியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை.

அந்தக் காலத்தில், பாரதத்தில் மக்களாட்சியை காலில் போட்டு மிதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல முயற்சிகள், ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகும் ஜனநாயக உணர்வு என்பது நம்முடைய நாடிநரம்புகளில் ஊறியிருக்கிறது என்பதால், இறுதியில் ஜனநாயகம்வெற்றி பெற்றது .பாரத நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி மீண்டும் மக்களாட்சியை நிறுவினார்கள்.மக்களுடன் இருந்து போராடிய பெரும் பேறு எனக்கும் கிடைத்தது.இன்று, தேசம் தான் சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டினை, அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் வேளையில், அவசரநிலையின் போது நிலவிய பயங்கரமான சூழ்நிலையை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறந்து விடக்கூடாது.வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலிருந்தும் கற்றுக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

கடந்த சில காலமாகவே நமது தேசத்தில் விண்வெளித் துறையோடு இணைந்த பல பெரிய பணிகள் நடந்திருக்கின்றன.தேசத்தின் இந்தச் சாதனைகளில் ஒன்று தான் ‘இன் ஸ்பேஸ்’ என்ற நிறுவனம் நிறுவப்பட்டது.விண்வெளித்துறையில், பாரதத்தின் தனியார் துறைக்கு சந்தர்ப்பங்களை ஊக்குவிக்கிறது.இந்தத் தொடக்கமானது, நமது தேசத்தின் இளைஞர்களைக் கவர்ந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக ‘இன் ஸ்பேஸ்’ தலைமையகத்தைத் திறந்து வைக்கச் சென்றிருந்த போது, அங்கே பல இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகளின் புதிய எண்ணங்களையும், உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. கணிசமான நேரம் வரை நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். !! இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்புவரை நமது தேசத்திலே, விண்வெளித்துறையில், ஸ்டார்ட் அப்புகள் என்பது குறித்து யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள்.இன்று இவற்றின் எண்ணிக்கை நூறையும் தாண்டி விட்டது.சில ஆண்டுகள் முன்புவரை நமது தேசத்திலே, விண்வெளித்துறையில், ஸ்டார்ட் அப்புகள் என்பதை யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள்.இன்று இவற்றின் எண்ணிக்கை நூறையும் தாண்டிவிட்டது.

சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப்புகளான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட்.இந்த ஸ்டார்ட் அப்புகள் மேம்படுத்தி வரும் ஏவு வாகனங்களால் விண்வெளியில் சிறிய சுமைகளையும் கொண்டு செல்ல முடியும்.இதனால் விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதைப் போல ஹைதராபாதின் மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான துருவா ஸ்பேஸானது, விண்கல வரிசைப்படுத்தி மற்றும் விண்கலங்களுக்காக உயர் தொழில்நுட்ப சூரியத்தகடுகள் பற்றி பணியாற்றி வருகிறது. நான் ஒரு விண்வெளி ஸார்ட் அப்பான திகந்தராவின் தன்வீர் அஹ்மதை சந்தித்தேன், இவர் விண்வெளியில் இருக்கும் குப்பைக் கூளங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.விண்வெளியில் குப்பைகளை அகற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை அவர் வடிவமைக்கும் சவாலையும் நான் அவருக்கு விடுத்துள்ளேன்.பெங்களூருவின் ஒரு விண்வெளி ஸ்டார்ட் அப்பான அஸ்ட்ரோம்மின் நிறுவனர் நேஹாஉருவாக்கி வரும் ஆண்டெனாக்கள், சிறியவை, விலை மலிவானவை.இந்தத் தொழில்நுட்பத்திற்கான தேவை உலகம் முழுவதிலும் ஏற்படும்.

மெஹசாணாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியான தன்வீ படேலையும் நான் சந்தித்தேன்.இவர் ஒரு மிகச் சிறிய செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இது அடுத்த சில மாதங்களில் விண்வெளியிலே ஏவப்பட இருக்கிறது. தன்வியைப் போலவே தேசத்தில் சுமார் 750 பள்ளி மாணவர்கள், அமிர்தப் பெருவிழாவில் 75 செயற்கைக்கோள்கள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்கள், இதில் அதிகப்பட்ச மாணவர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும்?

பின்லாந்தில் பாவோ நூர்மி விளையாட்டுக்களில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.இவர் தன்சாதனையை தானே தகர்த்திருக்கிறார்.கௌர்டேன் விளையாட்டுக்களில் நீரஜ் தங்கம் வென்றுள்ளார்.கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் நமது விளையாட்டு வீரர்கள் 12 சாதனைகளை செய்துள்ளனர்.அவற்றில் 11, வீராங்கனைகளால் நிகழ்த்தப்பட்டன.இவர்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.இவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.தங்கள் வாழ்க்கையில் போராடி வெற்றிஇலக்கை எட்டியுள்ளனர்.இவர்களுடைய வெற்றியில், இவர்களுடைய குடும்பத்தார், தாய் தந்தையருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.ஒலிம்பிக்கில் இடம்பெறும் போட்டிகளைத் தவிர, ஐந்து சுதேசி விளையாட்டுக்களும் இடம் பெற்றிருந்தன.இந்த ஐந்து விளையாட்டுக்கள், கதகா, தாங்க் தா, யோகாஸனம், களறிப்பாயட்டு, மல்லகம்ப் ஆகியன.

பாரதத்தில் ஜூலை 28ல் சர்வதேசசதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது; இந்த விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பாரதத்தில் பிறந்தது.இதில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. தெலங்கானாவைச் சேர்ந்த மலையேறும் வல்லுநரான பூர்ணா மாலாவத், உலகின் ஏழு மிகக் கடினமான, உயரமான மலைகளின் மீது ஏறும் ‘செவன் சம்மிட் சேலஞ்ஜ்’ என்ற சவாலை வென்று சாதனையைப் புரிந்திருக்கிறார். 13 வயதிலேயே, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனையைப் படைத்த வீராங்கனை இவர்.

குப்பையிலிருந்து செல்வம் என்ற கருத்தோடு தொடர்புடைய பல முயற்சிகள் பற்றி நாம் விவாதித்து வருகிறோம்.அதனையொட்டிய ஒரு எடுத்துக்காட்டு இது: மிசோரமின் தலைநகரான ஐஜ்வாலில் ஒரு அழகான ஆறு, சிடே லுயி. காலப்போக்கிலே இது, குப்பையும் மாசும் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது.கடந்த சில ஆண்டுகளில் இந்த நதியைக் காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன.இதற்காக அப்பகுதி நிறுவனங்கள், சுய உதவி அமைப்புகள், மக்கள்அனைவரும் இணைந்து, ‘சிடே லுயியைக் காப்பாற்றுவோம்’ என்றசெயல் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தினர்.நதியைத் தூய்மைப்படுத்தும் இந்த இயக்கத்தினர், நதியிலும் கரையோரங்களிலும் கிடைத்த பெரிய அளவில் நெகிழிப் பொருட்களிலிருந்து சாலையை உருவாக்கினர்.அதாவது தூய்மையோடு கூடவே வளர்ச்சி.இதேபோல, புதுச்சேரியின் கடற்கரையிலும் சுற்றுச்சூழலைப் பராமரிக்க, அப்பகுதி மக்கள், இளைஞர்கள் இணைந்து ‘ரீசைக்கிலிங் பார் லைப்’ என்ற இயக்கத்தைத் தொடக்கினார்கள்.இன்று புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு பகுக்கப்படுகிறது.மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தப்படுகிறது. இதைப் போன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு எதிராக பாரதம் செயல்படுத்தி வரும் இயக்கத்திற்கு விரைவும் கூட்டுகின்றது.

நமது தேசத்திலே பருவமழை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.பல மாநிலங்களில் மழை அதிகரித்து வருகிறது.நீர் மற்றும் நீர் பராமரிப்புத் திசையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பொறுப்பினை நமது நாட்டிலே, சமுதாயமானது இணைந்து ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது.ராஜஸ்தானின் உதய்பூரில் சுல்தான் சிங் உருவாக்கிய, பல்லாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு படிக்கிணறு ‘சுல்தான் கீ பாவ்டீ’.இந்த இடம் வறண்டு குப்பைக்கூளங்கள் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது.ஒரு நாள், சுற்றிப் பார்க்க வந்த சில இளைஞர்கள், இதைப் பார்த்து வருத்தப்பட்டார்கள்.அதனை மாற்றியமைக்க உறுதி பூண்டார்கள்.தங்களுடைய முயற்சிகளால் அவர்கள் படிக்கிணற்றுக்கு உயிரூட்டியது மட்டுமல்லாமல் அதனை இசையோடு இணைத்து விட்டார்கள்.இப்போது அங்கே இசை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.அயல்நாடுகளிலிருந்தும் பலர் இதைப் பார்ப்பதற்காக வருகின்றனர்.இந்த இயக்கத்தைத் தொடங்கிய இளைஞர்கள் பட்டயக் கணக்காயர்கள்.ஜூலை முதல் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினம் வருகிறது.தேசத்தின் அனைத்துப் பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது உபநிஷதங்களில் ஒரு உயிர் மந்திரம் உண்டு – ‘சரைவேதி சரைவேதி சரைவேதி’.இதன் பொருள்,’சென்று கொண்டே இரு, சென்று கொண்டே இரு’ என்பது தான். இந்த மந்திரம் நமது தேசத்திலே ஏன் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்றால், தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருத்தல், இயங்கிக் கொண்டு இருத்தல் என்பது தான் நமது இயல்புநிலை. ஒரு நாடு என்ற முறையில், நாம், ஆயிரக்கணக்கான வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டு தான் இங்கே வந்து சேர்ந்துள்ளோம்.ஒரு சமுதாயம் என்ற வகையில் நாம் புதிய எண்ணங்கள், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்கிறோம்.இதன் பின்னால் நமது கலாச்சார வேகத் தன்மை, பயணங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.ஆகையினால் தான் நமது ரிஷிகளும் முனிவர்களும், தீர்த்தயாத்திரை போன்ற தார்மீகக் கடமைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள்.

இந்த முறை சார்தாம் யாத்திரையில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்தனர்.நமது தேசத்தில் பல்வேறு சமயங்களில் பல்வேறு தேவ யாத்திரைகள் நடைபெறுகின்றன.தேவ யாத்திரைகள், அதாவது, இதில் பக்தர்கள் மட்டுமல்ல, பகவானே கூட யாத்திரை மேற்கொள்கிறார்.ஜூலை 1ம் தேதியன்று பகவான் ஜகன்னாதரின் புகழ்மிக்க யாத்திரை தொடங்க இருக்கிறது.குஜராத்தின் அஹ்மதாபாதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத துவிதியையில் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.நான் குஜராத்தில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரையில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது.இந்த தினத்திலிருந்து தான் கட்ச் பகுதியின் புத்தாண்டும் தொடங்குகிறது.கட்ச் பகுதிசகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மஹாராஷ்டிரத்தின் பண்டர்பூரின் யாத்திரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.பண்டர்பூரின் யாத்திரையில், யாரும் பெரியவரும் இல்லை, யாரும் சிறியவரும் இல்லை.அனைவருமே வார்கரிகள் தான், பகவான் விட்டலனின் சேவகர்கள் தான்.ஜூன் மாதம் 30ம் தேதியன்று அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது.நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கெடுக்க ஜம்மு கஷ்மீரம் வருகிறார்கள்.ஜம்மு கஷ்மீரத்தின் வட்டார மக்களும், அதே அளவு சிரத்தையோடு இந்த யாத்திரையின் பொறுப்புக்களை மேற்கொண்டு, தீர்த்த யத்திரிகர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள்.

தெற்கிலும் இப்படிப்பட்ட மகத்துவமான சபரிமலை யாத்திரை இருக்கிறது. சபரிமலையின் மீது குடிகொண்டிருக்கும் பகவான் ஐயப்பனை தரிசிக்க மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை, பயணிக்கும் பாதை முழுமையாகக் காடுகள் நிரம்பியதாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இன்றும் கூட மக்கள் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ளும் போது, அது இயல்பிலேயே ஏழைகளுக்குச் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.நீங்களும் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும்.

இவற்றுக்கு இடையே, நாம் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திடம் தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்புக் கவசம் இருக்கிறது.நாம் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் என்ற இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறோம்.தேசத்தில் விரைவாக முன்னெச்சரிக்கைத் தவணையும் போடப்பட்டு வருகிறது.இரண்டாவது தவணைக்குப் பிறகு முன்னெச்சரிக்கைத் தவணை போட்டுக் கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டது என்றால், நீங்கள் அந்த 3வது தவணையை உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தாருக்கு, குறிப்பாக மூத்தோருக்கும் முன்னெச்சரிக்கைத் தவணையைப் போடுங்கள்.கொரொனா முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிடமிருந்தும் விழிப்போடு இருக்க வேண்டும்.நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், சக்தியோடு முன்னேறிச் செல்லுங்கள்.