தடைசெய்யப்பட்ட பயங்கரவாத உல்பா அமைப்பான யுனைட்டட் லிபரேஷன் பிரண்ட் ஆப் அசாம் (ஐ) என்ற அமைப்பின் தளபதியான டுவிபன் சவுத் என்பவன் அசாமில் உள்ள பெசிமாரி கிராமத்தில் பதுங்கியிருந்த தகவலையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் டுவிபன் சவுத் அவனுடன் பதுங்கியிருந்த ஜமா அத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் / நியோ-ஜே.எம்.பி அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.