சிதம்பரத்திற்கு வந்த சோதனை

காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் வீடு அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் சி.பி.ஐ புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு முன்னர் 4 முறை ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. கடந்த 2019ல் ப.சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றையும் சி.பி.ஐ அனுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக வழக்கையும் சி.பி.ஐ விசாரித்து வருகிறது. 2010 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்நியச் செலாவணி தொடர்பில் பல குற்றங்கள் புரிந்துள்ளதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவாகி உள்ளது. இதன் தொடர்பாகவே சி.பி.ஐ சோதனை நடத்தியது. ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பல முறை பயணித்துள்ளார். இந்த அளவுக்கு அவர்கள் பயணிக்க காரணம் என்ன? என்ற விசாரணையும் சீனாவை சேர்ந்த சிலருக்கு ரூ. 50 லட்சம் வாங்கிக்கொண்டு விசா வழங்கிய குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.