ராஜஸ்தான், ஜெய்பூரில், அம்மா நில அரசின் பாடத்திட்டத்தில், முஸ்லிம் பயங்கரவாதம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்காக அதனை பதிப்பித்த ஒரு பாடநூல் வெளியீட்டு நிறுவனத்தை காவல்துறையினர் கண் முன்பாகவே உள்ளூரில் உள்ள சில முஸ்லிம்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். முன்பே அவர்கள் விடுத்த மிரட்டலையடுத்து பதிப்பகத்தார் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதனையடுத்து அங்கு மூன்று காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்தனர். ஆயினும் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை அந்த காவலர்கள் கைக்கட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். ‘காங்கிரஸ் ஆளும் மாநில பாடதிட்டத்தில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு மற்ற பதிப்பகங்களும் இதே பதிலைதான் அளித்துள்ளன’ என்கிறார் பாதிக்கப்பட்ட பாடநூல் வெளியீட்டாளர் சஞ்சீவ் பிரகாஷன்.