தமிழக அரசு திவாலாகும்

பழநியில்  செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், “தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. பில்லை தொட்டாலே ‘ஷாக்’ அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. கடன் சுமை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழக அரசு விரைவில் திவாலாகும். ஜாக்டோ ஜியோ உட்பட அனைத்து அரசு துறை அமைப்பினரையும் ஏமாற்றிதான் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் எனக்கூறி அதை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றியுள்ளனர். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 தருவதாகக்கூறி தர முடியாமல் உள்ளனர். தற்போது எந்த திட்டமும் தமிழக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. தமிழக அரசின் திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியால் மட்டுமே நிறைவேறுகிறது. ராகுல் நடைபயணம் தோல்வியடைந்துள்ளது. கேரவன்களுடன் கூடிய ஒரு சொகுசுப் பயணமாகவே இது அமைந்துள்ளது” என கூறினார்.