சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

நாரதா ஸ்டிங் வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட திருணமுல் கட்சித் தலைவர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் தேர்தலுக்கு முன்னதாக திருணமுல் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.கவில் இணைந்த சோவன் சாட்டர்ஜி ஆகியோரை விடுவிக்க, மமதா பானர்ஜி, சி.பி.ஐ அலுவலகத்தில் ஆறு மணி நேரம் தர்ணாவில் அமர்ந்து நாடகம் நடத்தினார். தன்னுடைய கட்சியின் குண்டர்கள் அடங்கிய ஒரு கும்பல் சி.பி.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதை அவர் தடுக்கவில்லை.மேலும், சி.பி.ஐ குறித்து அவதூறான கருத்துக்களையும் பரப்பினார்.இது குறித்து சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நீங்கள் விரும்பினால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரலாம்.’ என கூறியுள்ளது.