திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இப்பகுதியில் இத்திட்டத்தை அங்கு செயல்படுத்தினால் அங்குள்ள 1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழிக்கப்படும். 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகள் உடைக்கப்படும். மேலும், அங்குள்ள ஏரி, குளங்கள் போன்ற நீராதாரங்கள் நிர்மூலமாக்கப்படும். இதை எதிர்த்து அக்கிராம கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் குதிக்க வைத்தது தி.மு.க. அவர்களது கூட்டணிக் கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் என்ற பல போலி போராளிகளும், இடதுசாரி அமைப்புகளும் போராட்டத்தை முன்நின்று நடத்தின. நடிகர்கள் பலர் அதற்கு குரல் கொடுத்தனர். ஊடகங்கள் அதனை ஊதிப் பெரிதாக்கின என்பது நினைவு கூரத்தக்கது.