விருது பெற்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஷாரி மார்க்சன் என்பவர் எழுதிய ‘வுஹானில் உண்மையில் நடந்தது என்ன’ என்ற புத்தகம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. இதில் சீனாவில் கொரோனா தோன்றியதன் காரணம், அந்த கொடிய கிருமி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் பங்கு, அமெரிக்க உயர்மட்ட தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசியின் மூலமாக அதற்கு நிதியளிக்கப்பட்ட விவகாரம், அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி சீனா தன்னிச்சையாக செயல்பட்டது, தொற்றக்கூடிய நோய் கிருமிகளை கண்டறிந்து அதனை வகைப்படுத்த, சேமிக்க சீனா எடுக்கும் முயற்சிகள், தொற்று நோய்களை கண்டறிய உலக ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை சீனா மீறியது, கொரோனா வெளிப்பாட்டின் காரணமாக அமெரிக்கா ஒரே ஆண்டில் 22 வைரஸ் ஆராய்ச்சி துறைகளுக்கு கொடுத்து வந்த நிதியுதவியை நிறுத்தியது’ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதாரங்களுடன் இடம்பெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது என ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.