திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் இரவு நேரங்களில்அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து செம்மண்ணை வெட்டியெடுத்து கடத்தி வெளியே விற்பனை செய்யப்பட்டு வருவதாக வருவாய்துறை அதிகாரி (ஆர்.ஐ) பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தடுப்பதற்காக பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.அப்போது, அங்கு மணல் அள்ளியவர்களிடம், அரசு புறம்போக்கு இடத்தில் எப்படி நீங்கள் மணலை அள்ளுவீர்கள் என்று கேள்வியெழுப்பினார். அதற்கு, “இதைத் தடுக்க யாருடா நீ?” என்று கோபமாக பேசிய நரசிங்கபுரம் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜே.சி.பி ஓட்டுனர் மணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசி பிரபாகரனை கடுமையாக தாக்கினர்.இதனால், வருவாய் ஆய்வாளரின் மண்டை உடைந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நரசிங்கபுரம் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர், பிரபாகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜே.சி.பி ஓட்டுனர் மணிகிருஷ்ணன்,தனபால் உள்ளிட்ட மூன்று பேர் மீது பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், துறையூர் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.