பூமிக்கு வந்த சிக்னல்

பிரபல அறிவியல் இதழான நேச்சரில் வெளியான கட்டுரையின்படி, பூமியில் இருந்து சுமார் 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவது இது இரண்டாவது முறை. இந்த ரேடியோ சிக்னலை FRB 20190520B என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 2019 மே மாதம், சீனாவில் உள்ள குய்சோவில், அபெர்ச்சர் ஸ்பெரிகல் ரேடியோ டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் இந்த சிக்னலை பின்தொடர்ந்தனர். ஏப்ரல் 2020, செப்டம்பர் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சிக்னலிலிருந்து கிட்டத்தட்ட 75 வெடிப்புகள் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும், நியூ மெக்ஸிகோவில் அமைந்துள்ள Very Large Array (VLA)வை பயன்படுத்தி இந்த வெடிப்புகளுக்கு இடையே பலவீனமான ரேடியோ சிக்னல் வெளியவதையும் அவர்கள் உறுதி செய்தனர். இந்த ரேடியோ சிக்னல் கடந்த 2016ல் கிடைத்த FRB 12110லிருந்து வந்த ரேடியோ சிக்னலோடு ஒத்துப்போகிறது. இந்த ரேடியோ சிக்னல்கள் எதனால் எப்படி ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் விளக்கவில்லை. எனினும், இவை நியூட்ரான் நட்சத்திரத்திற்குப் பின்னால் விட்டுச் சென்ற சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களிலிருந்து இந்த சிக்னல்கள் வரலாம் என கூறுகின்றனர்.