இரண்டு நாட்களுக்கு முன், தாம்பரத்தில் வாகனத் தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒருகாரை மறித்து சோதனை செய்தனர். அதில் கரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த காரில் வந்த மருத்துவர் இம்ரான்கானை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் நண்பர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் இருந்து ரூ. 4,700 மதிப்புள்ள மருந்தை வாங்கி ரூ. 20 ஆயிரத்துக்கு விற்க முயன்றதாக விசாரணையில் இம்ரான்கான் தெரிவித்தார். சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரெம்டெசிவரை கள்ளச்சந்தையில் விற்க்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிவில் சப்ளைஸ் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. சாந்தி கூறினார்.