தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன், போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி இனிப்புகளின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆவின் நிறுவனத்துக்குத் தராமல், தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. அதன் மூலம் தி.மு.க அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் திலீப் அடிக்கப்போகும் 30 சதவீத கமிஷன் விவரங்களை வெளியிட்டார். இதனால், வேறுவழியின்றி தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறைக்கு வாங்கப்படும் இனிப்புகள் ஆவின் நிறுவனத்தில் வாங்கப்படும் என அறிவித்துள்ளார்.