பாரதத்தின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதை வழக்கமாகக்கொண்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சமீபத்தில் இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ’வின் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உலகத் தலைவர்களின் அலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. அதில் ஒட்டுகேட்கப்பட்டதாகக் கூறி 50 ஆயிரம் அலைபேசி எண்களின் பட்டியலை வெளியிட்டது. இதனை என்.எஸ்.ஓ மறுத்தது. பாரத அரசும் இதனை திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும், நமது நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் இதனை பெரிய விவாதப் பொருள் ஆக்கின. ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் இதனை ஊதி பெரிதாக்கினர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் திடீரென பின்வாங்கியுள்ளது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. தாங்கள் வெளியிட்ட பட்டியல் பெகாசஸ் உளவு செயலி வாயிலாக உளவு பார்க்கப்பட்ட எண்கள் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை, ஊடகங்கள்தான் அவ்வாறு வெளியிட்டன என கூறி, இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அம்னெஸ்டி.