செல்வப் பெருந்தகையின் சொத்து

நியூஸ் ஜே செய்தி தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான செய்தியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையின் வாழ்க்கை சரிதம் குறித்த செய்தி வெளியானது. அதில், ‘செல்வப்பெருந்தகை தனது அரசியல் பயணத்தை புரட்சி பாரதம் கட்சியில் துவக்கினார். பூவை மூர்த்தியால் ரிசர்வ் வங்கியில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையின் பெயர் அடிப்பட்டதால் அங்கிருந்து புதிய தமிழகம் கட்சியில் அடைக்கலம் ஆனார். சில நாட்களிலேயே இவரின் சுயரூபம் தெரியவந்ததால் விடுதலை சிறுத்தை கட்சிக்குத் தாவினார். 2001, 2006ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அவர் மீது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தலைமைக்கு துரோகம் செய்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என மாறி மாறி பச்சோந்திக்கு சமமாக வாழ்பவர். இவர் தற்போது லண்டனில் கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். அதன் இயக்குனரில் ஒருவராக அவரது மனைவி உமையாள் பெயர் இடம் பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் பியூனாக இருந்த செல்வப்பெருந்தகைக்கு எப்படி லண்டனில் கல்லூரி கட்டுமளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.