பி.பி.சி தொலைக்காட்சி, சமீபத்தில் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருந்தது. அந்த செய்தித் தொகுப்பு முழுவதும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு புதிய வீடு தேவையா?என்ற ரீதியிலேயே பி.பி.சியால் திட்டமிட்டு நடத்தப்பட்டது.இதில் திட்டத்தை விமர்சித்த ராகுல் காந்தி, கட்டிடக் கலைஞர் கௌதம் பாட்டியா, அரசியல் ஆய்வாளர் மோகன் குருசாமி ஆகியோரின் பேச்சுகள் மேற்கோள் காட்டப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கட்டப்படும் அந்த வீடு பிரதமருக்கானதே தவிர மோடிக்கானது அல்ல என்பதை மறைத்து, மோடியின் தற்போது கட்டும் தங்குமிடம் மிகவும் ஆடம்பரமானது என கூறப்பட்டது. இந்த செய்தித் தொகுப்பு காங்கிரசின் டூல்கிட்டை ஒத்து இருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் புதிய அலுவலக வளாகங்கள் ஏன் தேவை என்று ஒரு முறை கூட அந்த செய்தித் தொகுப்பில் ஆராயப்படவில்லை. முன்னதாக சில நாட்களுக்கு முன் பி.பி.சி, கங்கையில் சில உடல்கள் மிதந்து வந்ததைப் பற்றி வெளியிட்ட செய்தியில், பாரதத்தையும், ஹிந்துக்களின் பழக்கவழக்கங்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் ‘பாரதத்தின் புனிதமான நதி உடல்களால் வீங்கியுள்ளது’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும், பி.பி.சி செய்தி நிறுவனத்தின் சார்புத் தன்மையை வெளிச்சம்போட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளன.