அறிக்கை கோரும் பிரதமர்

அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறுவது மிகவும் அவசியம். இல்லையெனில் அது, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், செலவின உயர்வுகள், வருமான இழப்பு, தேசத்தின் வளர்ச்சி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிகோலும். மத்திய அரசின் 504 உட்கட்டமைப்புத் திட்டங்கள், முடிக்கப்பட வேண்டிய கால அட்டவணையையும் தாண்டி தொடர்கின்றன. 483 உட்கட்டமைப்பு திட்டங்களில் காலதாமதம், நீதிமன்ற வழக்குகள் போன்ற பல்வேறு காரணங்களால் திட்டசெலவுகள் அதிகமாகியுள்ளன என்ற புள்ளிவிவரத்தை எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகள், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதப்படும் அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்கள், அதன் காரணங்கள், திட்ட மதிப்பு, தாமதத்தால் உயர்ந்துவிட்ட செலவினங்கள்,    இதனால் வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த விரிவாக பட்டியலை சமர்ப்பிக்க அனைத்துத்துறை அமைச்சகங்களையும் பிரதமர் மோடி கோரியுள்ளார்.