முதல்வரை மிரட்டியவர் கைது

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை மிரட்டல் விடுத்த அமீன் என்ற நபர் ஏப்ரல் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விச்சாரனையில், முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்து அதன் மூலம் தனது காதலியின் தந்தையை பொய்யாக சிக்க வைக்க அமீன் முயன்றது தெரியவந்துள்ளது. அமீன் ஏப்ரல் 23 அன்று உத்தரப் பிரதே அரசின் அவசர உதவி எண் 112க்கு ‘சி.எம் யோகியை விரைவில் கொன்றுவிடுவோம்’ என்று வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பினார். மிரட்டல் செய்தியைப் பெற்ற உடனேயே, உ.பி காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையைத் தொடங்கியது. அந்த எண்ணின் உரிமையாளரான சஜ்ஜாத் ஹுசைனை லக்னோ காவல்துறை தொடர்பு கொண்டு கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது அலைபேசி இரண்டு நாட்களுக்கு முன்பு திருடப்பட்டதாகக் கூறினார். பின்னர், அமீன் என்ற நபர் தனது காதலியின் தந்தையான சஜ்ஜாத் ஹுசைன் தங்கள் காதலை எதிர்த்ததால் அவரை இதில் சிக்க வைக்க திட்டம் தீட்டியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவனை கைது செய்தனர். அமீனிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு சிறையில்; அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமன் ராஜா என்பவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப் போவதாக மிரட்டி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரு வழக்குகளையும் உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.