மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஒரு முஸ்லிம் கும்பலால் வெடித்த வன்முறைக்கு மூல காரணமான அர்பாஸ் கானை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்துள்ளது. அவர் 2ம் ஆண்டு வி.எப்.எக்ஸ் அனிமேஷன் படிக்கும் மாணவர் ஆவார். ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்தல் மற்றும் பலர் காயமடைந்ததற்கு காரணமான வன்முறையைத் தூண்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அகோலா எஸ்.பி சந்தீப் குகே உறுதிப்படுத்தினார். முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை உள்ளடக்கிய இன்ஸ்டாகிராம் பதிவைத் தொடர்ந்து மே 15 அன்று அகோலாவில் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில், கல் வீச்சு, வன்முறை, தீ வைப்பு பயங்கரவாதங்களை முஸ்லிம்கள் அரங்கேற்றினர். இதில் விலாஸ் கெய்க்வாட் என்ர ஒரு அப்பாவி நபர் இறந்தார். எட்டு பேர் காயமடைந்தனர். முஸ்லிம் வன்முறை கும்பல் காவல்நிலையத்தின் முன் திரண்டனர். அங்கு சர் தன் சே ஜூடா (தலையை வெட்டுவோம்) என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் 144 தடை உத்தரவுகளை பிறப்பித்தனர். இவ்வழக்கில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த காவல்துறை விசாரணையில் அர்பாஸ் கான் சர்ச்சைக்குரிய எடிட் செய்யப்பட்ட ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வேண்டுமென்றே பரப்பினார், அது வைரலானது., இதுவே இந்த வகுப்புவாத மோதலுக்கு மூல காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பாக சமீர் சோனாவனே என்ற நபர் இன்ஸ்டாகிராம் ஒரு பக்கத்தை உருவாக்கியிருந்தார்.அர்பாஸ் கான் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தார். திரைப்படத்தை ஆதரித்ததற்காக கோபமடைந்தார். அர்பாஸ் அவருடன் இதுகுறித்து சாட் செய்தார். அது பின்னர் தகராறாக மாறியது. இருவரும் அசிங்கமான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை இதில் பயன்படுத்தியுள்ளனர். இந்த சாட்டிங் முடிந்ததும், அர்பாஸ் கான் அதனை எடிட் செய்து, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி தப்பான அர்த்தங்களை கற்ப்பித்து அதனை வைரலாக்கினார். மேலும், முஸ்லிம் சமூகம் மற்றும் அவர்களின் மதத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அனுப்பப்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் கும்பலைத் தூண்டிவிட்டார் என தெரிய வந்துள்ளது.