திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா அடைமதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள ஊர் பொதுஇடத்தை கிறிஸ்தவர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என அபகரிக்க முயற்சி செய்தனர். இது குறித்து அந்த ஊரில் உள்ள ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் இரு தரப்பினரும் செல்லக்கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய இடத்தில் அசன பண்டிகை நடத்தப்போவதாக கிறிஸ்தவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே இந்து முன்னணி நிர்வாகிகளுடன் அந்தௌ ஊரை சேர்ந்த ஹிந்துக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் நேற்று2 காலை அசன பண்டிகை வேலைகளை சர்ச்சைக்குரிய இடத்தில் நுழைந்து கிறிஸ்தவ தரப்பினர்கள் துவக்கினர். இதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள் கல்வீச்சு தாக்குதலி ஈடுபட்டனர். இதில் புஷ்பம் என் ஹிந்து பெண்மணியின் தலையில் காயம் ஏற்பட்டது.