ஜம்மு காஷ்மீரை ஆண்ட, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), கஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத நடவடிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க, ஹுரியத் மாநாட்டிற்கு அவ்வப்போது பணத்தைக் கொடுத்து வந்துள்ளதைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட துணைக் காவல் ஆணையர் தவீந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி நவீத் பாபு தொடர்பான வழக்கு விசாரணையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட, பி.டி.பி இளைஞர் பிரிவுத் தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ரா, ஷாஹீன் அஹ்மத் லோன் மற்றும் தபாசுல் உசேன் பரிமூ உள்ளிட்ட மூவர் கைது செய்யபட்டனர். இவர்கள்மீது என்.ஐ.ஏ, துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் (ஏ.பி.ஹெச்.சி) பிரிவினைவாத்த் தலைவர் அல்தாஃப் அகமது ஷாவுக்கு ரூ. 5 கோடியை பி.டி.பி சார்பாக பார்ரா கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.