கேரளாவில் அதிகரித்து வரும் முஸ்லிம் அடிப்படைவாதத்தை எடுத்துக்காட்டும் விதமாக, ‘நோ ஹலால்’ உணவக உரிமையாளரான துஷாரா முஸ்லிம் ஜிஹாதிகளால் தாக்கப்பட்டுள்ளார். துஷாரா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பலரி வட்டத்தில் தனது ‘நோ ஹலால்’உணவகத்தைத் தொடங்கினார், அங்கு ஹலால் அல்லாத இறைச்சி வகைகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. முதல் உணவகத்தின் வெற்றிக்குப் பிறகு, காக்காடுவில் தனது இரண்டாவது உணவகத்தைத் திறக்க அவர் தயாரானபோதுதான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து துஷாரா, தனது முகநூலில், முதல் உணவகத்தைத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, முஸ்லிம்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்தன. உணவகத்தின் முன் ‘நோ ஹலால்’ விளம்பரப் பலகையைக் வைக்கக்கூடாது, பன்றி இறைச்சியை விற்கக்கூடாது என்று முஸ்லிம்கள் மிரட்டினர். அதை அவர் நிராகரித்ததால் தாக்கப்பட்டதாக துஷாரா தெரிவித்தார். முன்னதாக, கேரளாவில் மீனங்காடியில் ஹலால் அல்லாத இறைச்சியை விற்ற ஷாஜி எம் வர்கீஸ் என்ற கிறிஸ்தவர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக பச்சை இறைச்சியை ஊட்டி, லாரியை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.