முன்னாள் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் (WBCUPA) முன்னாள் பொதுச் செயலாளருமான பைசாகி பானர்ஜி, தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட திருணமூல் காங்கிரஸ் கட்சின் அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜிக்கு, அர்பிதா முகர்ஜியைத்தவிர மோனாலிசா தாஸுடன் தொடர்பு இருந்தது. மோனாலிசா தாஸ் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியை ஆவார்.அவரது அலுவலகத்தில் எப்போதும் 4 பெண்கள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டும், அவரது அலுவலகத்தில் பார்த்தா சாட்டர்ஜியின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு இருப்பார்கள். நான் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், மோனாலிசா தாஸ் உதவிப் பேராசிரியராக இருந்தார். கல்லூரியின் துணைவேந்தரின் மனைவி என்னிடம் புகார் அளித்தார். அதில் பார்த்தா சாட்டர்ஜியின் காதலி மோனாலிசா என் கணவருடன் தொடர்பு வைத்திருக்கிறார்.அவர் என் குடும்பத்தை அழிக்கிறார் என குற்றம் சாட்டினார்.அதற்கான ஆதாரமாக, பார்த்தா மற்றும் மோனாலிசா இடையே நிகழ்ந்த சில அரட்டைகளை எனக்கு அனுப்பினார்.அதிலிருந்து இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்தது.அவற்றை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன், ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால், நான் அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.அவர் முதலமைச்சருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.ஆனால் மமதா பானர்ஜி அந்த கடிதத்தை பார்த்தா சாட்டர்ஜிக்கு அனுப்பிவிட்டார்.சாட்டர்ஜி கல்லூரியின் துணைவேந்தரை அழைத்து மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.பார்த்தா சாட்டர்ஜிக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன்.அவருடைய உண்மையான சுயரூபத்தை நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்.அவர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அலுவலகத்திற்கு வருவார்.எஞ்சிய காலத்தில் அவர் எங்கு வாழ்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது.இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.முன்னதாக, பார்த்தா சாட்டர்ஜி அதிக எண்ணிக்கையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார்.அவற்றில் பலவற்றை அவர் அர்பிதா முகர்ஜி மற்றும் மோனாலிசா தாஸ் உள்ளிட்ட அவரது நெருங்கிய உதவியாளர்களுக்கு பரிசளித்துள்ளார்.பார்த்தா சாட்டர்ஜி தனது குடியிருப்பை மினி வங்கியாக பயன்படுத்தியதாக அர்பிதா சாட்டர்ஜி அமலாக்கத்துரையிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.மோனாலிசா தாஸுக்கு பரிசாக அளிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் அதே நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.மோனாலிசா பெயரில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.