டுவிட்டரில் டிரெண்டாகிவரும் ‘பாய்காட் பதான்’ ஹேஷ்டேகைத் தொடர்ந்து, ஷாருக்கான் தீபிகா படுகோன் நடித்த பதான் படத்தை மத்திய பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. அம்மாநில மூத்த அரசியல் தலைவர்கள் பலர் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இது பதான் பற்றியது அல்ல, பரிதான் (ஆடைகள்) குறித்தது. ஹிந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஆடைகளை அணிந்து பொது இடங்களில் தன்னைக் காட்டிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதில் பாரத கலாச்சாரத்தே சேர்ந்த அனைத்து மதங்களும் ஒருமனதாக உள்ளன” என்று சுரேஷ் பச்சூரி கூறியுள்ளார். மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தடம் மிஸ்ரா “பாடலில் உள்ள ஆடைகள் ஆட்சேபனைக்குரியவை. பாடல் ஒரு மோசமான் மனநிலையை பிரதிபலிக்கிறது. பாடலின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை சரிசெய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன். பாடலின் தலைப்பு ‘பேஷாரம் ரங்’ என்று நான் நம்புகிறேன். பாடலில் காவி மற்றும் பச்சை நிறங்கள் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆட்சேபணைக்குரியது. மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், இல்லையெனில் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம். முன்னதாக, தீபிகா படுகோனே ஜே.என்.யூவில் ‘துக்கடே துக்கடே கும்பலுக்கு ஆதரவாக நின்றார். அப்போதே அவரது மனநிலை என்ன என்பது உலகுக்கு அம்பலமானது” என்று கூறினார். பதான் திரைப்படத்திற்கு மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கௌதமும் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். “ஷாருக்கான் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, அதை தனது மகளுடன் பார்க்கிறேன் என்று உலகுக்குச் சொல்ல வேண்டும். நபிகள் நாயகத்தைப் பற்றி இதே போன்ற படத்தைத் தயாரித்து இயக்க நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்,” என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் முஸ்லிம் மத உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளனர். பதான் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்தவேண்டும் என அயோத்தியின் ஹனுமன் காரி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.