புனே பெருநகரப் வளர்ச்சித்திட்ட அமைப்பான பி.எம்.ஆர்.டி.ஏ முன்மொழிந்துள்ள ரூ. 73,000 கோடி வரைவு மேம்பாட்டுத் திட்டமான பி.பி.ஆர் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டால், வரும் 20 ஆண்டுகளில் திட்டமிட்ட வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதன் மூலம் புனே நகரத்தை பாரதத்தின் மிக நவீன நகரமாகவும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நகரமாகவும் மாறும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் திவாசே கூறியுள்ளார். மேலும், இத்திட்டத்தின்படி, வசதியான போக்குவரத்து இயக்கம், திறமையான உட்கட்டமைப்புகள், தன்னிறைவு பெற்ற வீட்டு வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இயற்கைக்கு உகந்த சூழல் ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்ற நகரமாக புனே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.