ஆம்புலன்சுக்கு வழிவிடாத அமைச்சர்

தஞ்சாவூர் மாவட்டத்தில், தி.மு.க அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்ய்யாமொழி, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அணிவகுத்து சென்றன. அப்போது, பாலத்தின் மறுபுறத்தில் அமைச்சரின் கார் செல்லும் வரை, போலீசாரால்காவலர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ், அமைச்சர் சென்ற பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டது. ‘ஆம்புலன்ஸ்சில் நோயாளி இருந்தாலும், இல்லா விட்டாலும் அவரசமாக சைரன் ஒலித்தால், உடனே போக்குவரத்தை சரி செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பது விதி. ஆனால், ஒரு அமைச்சருக்காக இப்படி ஆம்புலன்சை நிறுத்தி வைத்தது சரியல்ல.ஒருவேளை ஆம்புலன்ஸ்சில் இருந்தவர் இறந்திருந்தால் யார் பொறுப்பு? காவலர்கள் இந்த தவறை செய்திருந்தாலும் அதற்கு அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.