தலைக்கு விலை வைத்தவர் கைது

சுவாமி தரிசன பாரதி ஒரு ஹிந்து ஆர்வலர், உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிந்துக்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர். கோயில் நிலங்களை காக்க பிரச்சாரம் செய்பவர். அவர், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பி வருவதாகவும், அவரின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் தலைவரான மௌலானா ராசா. இவர், ஹபீஸ் பைசான் ராசா பரேலியில் உள்ள ஒரு உள்ளூர் மதரசாவின் தலைவராகவும் ‘சர்வ சமாஜ் சங்கதன்’ என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வரும் அவர், உத்தரபிரதேசத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளவர். தற்போது ராசாவை உ.பி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.