கொரோனா போரில் டி.டி.பியின் முக்கியப் பங்கு

சீனாவில் இருந்து பரவிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைத் தரும் நிறுவனங்களின் திட்டங்களுக்கான நிதி உதவியைஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஅமைப்பான ‘தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம்’ (டி.டி.பி) வழங்கியது. இதனால், பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தாங்கள் கண்டுபிடித்த, தயாரித்த பொருட்களைக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவின.உதாரணமாக டி.டி.பியின் உதவியால் பி.சி.ஆர் அடிப்படையிலான மூலக்கூறு கண்டறியும் கருவியைபுனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி தயாரித்தது. இந்த கிட் உற்பத்தியால் குறுகிய காலத்தில் தினசரி கொரோனா சோதனை 30 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரித்தது.பாரதத்தில் முதல்முறையாக வீட்டிலேயே சுய கொரோனா பரிசோதனைக் கருவி ‘கோவிசெல்ஃப்’ உருவாக்கப்பட்டது.இதைப்போல, பல பரிசோதனை கருவிகள், முக கவசங்கள், சானிடிசர்கள், வெப்ப அளவு மானிகள், மருத்துவ சாதனங்கள் போன்றபலவற்றை தயாரித்து வணிகமயமாக்க பேருதவி புரிந்துள்ளது டி.டி.பி.