நூலகத்திற்கு கலாச்சார அமைச்சகம் நிதியுதவி

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், மத்திய நூலகம், டெல்லியில் உள்ள மத்திய செயலக நூலகம், டெல்லி பொது நூலகம், குதா பக்ஷ் ஓரியண்டல் பொது நூலகம், பாட்னா மற்றும் ராம்பூர் ரசா நூலகம் ஆகிய 6 பொது நூலகங்கள் செயல்படுகின்றன. பொதுவாக, நூலகங்கள் மாநிலங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்குபவை. எனினும், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ,கொல்கத்தாவில் உள்ள ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை, பொது நூலகங்களுக்கு இட வசதியை அதிகரிக்க தேவையான நிதி உதவியை வழங்குகிறது. நூலகங்களுக்கான தேசிய திட்டத்தை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதில் உள்ளகட்டமைப்பு மேம்பாட்டு பிரிவின் கீழ், மாநில, மத்திய நூலகம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு மாவட்ட நூலகத்துக்கு கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதியளிக்கப்படுகிறது என மத்திய கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார்.