தி கேரளா ஸ்டோரி திரைப்படக் காட்சிகள் ரத்து

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கடந்த மே 5ம் தேதி சென்னையில் உள்ள 13 மல்டி பிளெக்ஸ் திரையரங்கங்கள் வெளியிட்டன. திரையரங்கங்களின் முன்னால் முஸ்லிம் மதவாத அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த சூழலில், நேற்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிபிளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தொடர் போராட்டங்கள், திரையரங்க பாதுகாப்பு மற்றும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனினும், ‘திராவிட மாடல் ஆட்சியில் திரையரங்குக்குக் கூட உரிய பாதுகாப்பை தரமுடியாத சூழலில் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை, சிறுபான்மையினரை தாஜா செய்து வாக்குவங்கி அரசியல் செய்தே பழகிவிட்ட திராவிட கட்சிகள், தி.மு.கவின் ஹிந்து விரோத போக்கு, தி.மு.க குடும்பத்தினரிடம் கூண்டுப் பறவையாகிவிட்ட திரைத்துறை, அவர்களது அரசியல், அதிகார பலம் போன்ற பல கரணங்களால் தான் திரையரங்க உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பார்கள், இதற்கு முன்னர் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெளியானபோது உருவாக்கப்பட்ட சிக்கல்கள், கிடுகு திரைப்படத்தை திரையரங்கங்களில் வெளியிடாமல் இருக்க கொடுக்கப்பட்ட அழுத்தம் போன்ற பல உதாரணங்களை இதற்கு சொல்ல முடியும்’ என சமூக ஊடகங்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், “இந்த படம் பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், அதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்றும் கூறியுள்ளார். மேலும், ‘இப்போதெல்லாம் மக்கள் அமைதியற்றவர்களாகவும், பொறுமையற்றவர்களாகவும் உள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியானபோது, பலரும் இது ‘இஸ்லாமுக்கு எதிரானது’ என்று நினைத்தனர். ஆனால் இப்போது படத்தைப் பார்த்து, அதே மக்கள் அதனை புகழ்ந்து வருகின்றனர். முதலில் அவர்கள் படத்தைப் பார்க்கட்டும். இப்போதெல்லாம் நாம் ஓய்வில்லாமல் இருக்கிறோம். பொறுமையிழக்கிறோம். சமூக ஊடகங்கள் நம்மைப் பொறுமையிழக்கச் செய்துவிட்டன. முன்பு ஒருவரைத் தவறாகப் பேசுவதற்கு பத்து முறை யோசிப்போம். ஆனால் இப்போதெல்லாம் சமூகத்தில் உடனடியாக தவறாகப் பேசலாம். மீடியாவில் எங்கள் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியானபோது பலர் இஸ்லாத்திற்கு எதிரானது என்று நினைத்தார்கள். இதனால் பலர் குதித்து எங்களை திட்டி திட்டினார்கள்.இப்போது படம் வெளியாகியுள்ளது.படத்தை மக்கள் பார்க்கிறார்கள். அதே மக்கள் எங்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் படத்தைப் பார்க்காத வரை மட்டுமே தவறான புரிதல்கள் தொடரும். அதைப் பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.