பீகார் மாநிலம் பெட்டியா கிராமத்தில் ராமர் ஜானகி கோயிலின் பூஜாரி ருடல் சா என்பவர் அங்கு 40 ஆண்டுகளாக பூஜாரியாக பணியாற்றி வந்தார். காது கேட்காத வாய் பேசமுடியாத அவர், கோயிலிலேயே இரவில் தன்ங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலில் சுவர் ஏரி குதித்து உள்ளே புகுந்த சில மர்ம நபர்கள், அவரது தலையை வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். மேலும், அந்த பயங்கர கொலையாளிகள் அவரது தலையை துண்டித்து 2 கி.மீ தொலைவில் உள்ள பிப்ரா காளிதேவி கோயிலில் வைத்து சென்றனர். இது அந்த பகுதியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். . இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதேபோல மற்றொரு சம்பவமாக, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள திதர்கஞ்ச் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புத்தா டொயோட்டா ஷோரூமுக்குள் 12 முகமூடி அணிந்த மர்மநபர்கள் ஊடுருவி, தனியார் காவலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். மேலும், பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சிமுல்தாலா பிளாக்கில் கோகுல் யாதவ் என்ற பத்திரிகையாளர், தனது வீட்டிலிருந்து கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது பட்டப்பகலில் 5 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். லாலு பிரசாத் யாதவின் மகனுடன் பீகார் முதல்வர் நிதிஷ் கைகோர்த்த சில மணி நேரங்களுக்குப் இந்த மூன்று மூன்று கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ள பீகார் மக்கள், லாலு பிரசாத் காலத்து காட்டாட்சி மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.