மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், போலி தடுப்பூசி போடுவது, மற்றவர்களின் ஆதார் எண், தொலைபேசி எண்ணை வைத்து வேறு சிலருக்கு தடுப்பூசி போடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டால் குறுஞ்செய்தி வருவதில்லை, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே குறுஞ்செய்தி வருவது போன்ற நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசம் போபாலின் திலா ஜமல்புரா, வேதாந்த் என்ற 13 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதேபோல், சாட்னாவை சேர்ந்த சைனேந்திர பாண்டே என்பவரின் அலைபேசிக்கு, அவருக்கு யார் என்றே தெரியாத 3 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய ரோஹிங்கியாக்கள், வங்க தேசத்தவர்கள் போன்றோருக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியா, கள்ளத்தனமாக தடுப்பூசிகள் அதிக பணத்திற்கு விற்கப்படுகிறதா, இதில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மருத்துவத்துறை பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக விசாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.