ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மால்டாஸ் சாலையில் 40 வயதான கண்ணையா லால் என்பவர் தையல் கடை வைத்துள்ளார். இவர், பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தார். தனது முகநூல் பக்கத்திலும்வாட்ஸ்ஆப்பிலும் நூபுர் ஷர்மாவை முகப்புப் படமாக வைத்திருந்தார்.
நேற்று முன் தினம், அவரின் கடைக்கு 2 முஸ்லிம் நபர்கள் சென்று துணி தைக்க வேண்டும் என கூறினர். கண்ணையா லால் அவர்களுக்கு அளவு எடுத்தார். அப்போது ஒரு முஸ்லிம் நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணையா லாலை கொடூரமாக தாக்கிக் கொன்றதுடன் கண்ணையா லாலின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தார். இன்னொரு நபர் அதனை வீடியோ பதிவு செய்தார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய இருவரும் கொலை தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவவே ராஜஸ்தானின் பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. முகமது ரியாஸ், முகமது கௌஸ் என்ற அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணையை துவங்கியுள்ளனர். அவரது உடலில் 26 வெட்டுகள் உள்ளன என்றும். அதில் சுமார் 10 வெட்டுகள் கழுத்துப் பகுதியையொட்டியே இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சன்னி முஸ்லிம் பிரிவின் சூஃபி பரேல்வி உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சன்னி முஸ்லிம்களின் அடிப்படைவாத அமைப்பான தாவத் இ இஸ்லாமி குழுவுடனும், தெஹ்ரிக் இ லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்புடனும் இந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கண்ணையா லாலுக்கு சில முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதுபற்றி கண்ணையா லால் காவல்துறையில் புகாரளித்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அது திடீரென திரும்ப பெறப்பட்டது.
இந்த படுகொலைக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் வி.ஹெச்.பி போன்ற பல்வேறு ஹிந்து அமைப்புகளும் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகை கங்கணா ரணாவத் போன்றோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.