கடந்த ஞாயிறு அன்று பொதுமுடக்கத்தின்போது, கோயம்பேட்டில் ஒரு பெண் உட்பட 8 பேர் ஒரே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் ஆட்டோ ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்பதால் ஆட்டோவை பறிமுதல் செய்ய காவலர்கள் முடிவு செய்தனர். அப்போது, ஆட்டோவுக்குள் இருந்த மூதாட்டி அழுது கொண்டு இருந்தார். விசாரித்தபோது, அந்த மூதாட்டியின் மகன் இறந்து விட்டதாகவும், அந்த துக்க நிகழ்ச்சிக்காக செல்வதாகவும் ஆட்டோவில் வந்தவர்கள் தெரிவித்தனர். மூதாட்டி காலையில் இருந்து சாப்பிடகூட இல்லை என்பதை அறிந்து அவர் உட்பட ஆட்டோவில் வந்தவர்கள் அனைவருக்கும், தங்களுக்காக வைத்திருந்த பார்சல் உணவைக் கொடுத்து அனுப்பி வைத்தனர் காவலர்கள்.