கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பி.எப்.ஐ, சி.எப்.ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் அமர்வு, ‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகளை மீறுவது சரியான நடமுறையல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்’ என உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.